2100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோர 12 நகரங்கள் கடலுக்குள் மூழ்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. திங்கள்கிழமை ஐக்கியநாடுகள் அவை வெளியிட்டுள்ள ஐபிசிசி அறிக்கையானது மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : அச்சம் தரும் காலநிலை மாற்றம்: அழியப்போகிறதா உலகம்?
புவி வெப்பமடைதலின் காரணமாக பனிப்பாறைகள் உடைவது, கடல்நீர் மட்டம் உயர்தல், வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிப்பு, பஞ்சம் மற்றும் வறட்சி ஏற்படுதல் உள்ளிட்டவை ஏற்பட உள்ளதாக ஐபிசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 12 நகரங்கள் கடலில் மூழ்க உள்ளதாக எச்சரித்துள்ளது.
ஐபிசிசி அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி 2100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் கடலுக்கடியில் 2.7 மீட்டர் அளவு ஆழத்தில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காலநிலை மாற்றத்திற்கான தீர்வு யார் கையில்?
இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கலை தீர்க்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ள நாசா மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.