கேரளத்தில் புதிதாக 21,119 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 21,119 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 21,119 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"புதிதாக 21,119 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35,86,693 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 15.91 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 152 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 18,004 ஆக உயர்ந்துள்ளது.
18,493 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 33,96,184 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 1,71,985 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."