இந்தியா

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா: மத்திய அரசு தகவல்

DIN

நாடு முழுவதும் இதுவரை 86 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 86 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில், 34 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கரோனா வைரஸ் தொற்றில் ஏற்படும் மரபணு மாறுபாடுகளைக் கண்காணிக்கும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய  அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT