இந்தியா

மோடி ஏன் பேச மறுக்கிறார்? ப.சிதம்பரம் கேள்வி

DIN

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார் என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி மத்திய அரசு விவாதத்திற்கு மறுத்து வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “பெகசிஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே! எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்? என பிரதமர் மோடியை கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT