புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு 
இந்தியா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார்.

DIN


புதுதில்லி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக தில்லி சென்றுள்ளார்.

புதுதில்லி தெலங்கானா அரசு இல்லத்தில் தங்கியுள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, மீன்வளத்துறை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் மரியாதை நிமித்தமாக புதன்கிழமை நேரில் சந்தித்து பேசினார்.

 அப்போது ஆளுநர் தமிழிசை, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT