பள்ளிகளில் நாள்தோறும் 10,000 கரோனா பரிசோதனைகள்: பஞ்சாப் அரசு உத்தரவு
பள்ளிகளில் நாள்தோறும் 10 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை நடத்துமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் நாள்தோறும் 10 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை நடத்துமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பஞ்சாபில் கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டன. ஆனால், லுதியானாவில் இரண்டு பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை அரசுப் பள்ளி ஒன்றில் 6 மாணவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பஞ்சாப் தலைமைச் செயலர் தலைமையில் கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிகளில் நாள்தோறும் குறைந்தபட்சம் 10,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. மேலும் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வருவதை துணை ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.