டிரம்ப்புக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்! அமெரிக்காவில் மாபெரும் போராட்டம்!
டிரம்ப்புக்கு எதிராக ‘அரசர்கள் வேண்டாம்’ பேரணிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறித்து...
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.
ஈரான் போர், அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக ‘அரசர்கள் வேண்டாம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா எங்கிலும் சனிக்கிழமை (மார்ச் 28) வெவ்வேறு பகுதிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் மீது மிகுந்த அதிருப்தி அடைந்த மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நாட்டில் நமக்கு ஜனநாயகம் வேண்டுமென்றால், நாம் போராட்டத்தில் ஈடுபட்டு அதைக் காப்பாற்ற வேண்டும்” என்று மனக்குமுறல்களைக் கொட்டினர்.
Advertisement
Advertisement
செயின்ட் பாலில் உள்ள மினசோட்டா கேபிடல் புல்வெளியிலும் அதைச் சுற்றியுள்ள தெருக்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்துக்குத் துணைநின்றனர்.
அவர்களில் சிலர், வரலாற்று ரீதியாக அமெரிக்கக் கொடிகளைத் தலைகீழாகப் பிடித்திருந்தனர். கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயார்க் நகரத்திலிருந்து, 2024 தேர்தலில் டிரம்ப் 66% வாக்குகளுடன் வெற்றி பெற்ற மாகாணமான கிழக்கு இடாஹோவில் உள்ள 2000 க்கும் குறைவான மக்கள் வசிக்கும் டிரிக்ஸ் என்ற ஊர் வரை மக்கள் திரண்டனர்.
வாஷிங்டனில், நூற்றுக்கணக்கானோர் "கிரீடத்தைக் கீழே போடு கோமாளியே" மற்றும் "ஆட்சி மாற்றம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, பேரணியாகச் சென்றனர்.
கேன்சஸ் மாகாணத்தின் டோபெகா நகரில், போராட்டக்காரர்கள் காற்றடைக்கப்பட்ட தவளை உடையையும், டிரம்பின் குழந்தை வடிவத்தையும் அணிந்திருந்தனர்.
’அரசர்கள் வேண்டாம்’ போராட்டங்களின் முதல் இரண்டு கட்டங்களில், ஜூன் மாதத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோரும், அக்டோபர் மாதத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமானோரும் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
millions of people participated in the "No Kings" rallies held against Trump across the United States on Saturday (March 28).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.