இந்தியா

ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

DIN

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. இந்நிலையில், கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாள்கள் மீதம் இருந்த நிலையில், நேற்று(ஆக.11) காலையுடன் மக்களவையும், மாலையுடன் மாநிலங்களவையும் முடித்துக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது, பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT