மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,787 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,787 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,787 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 5,787 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 63,87,863 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 134 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் இன்று புதிதாக 19,451 பேருக்கு கரோனா
இதுவரை மொத்தம் 61,86,223 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 63,262 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு இறப்பு விகிதம் 2.11 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 96.84 சதவிகிதமாக உள்ளது.