முகப்பு
இந்தியா

ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தில் பெண்களுக்கு தொழிற்கல்விப் பயிற்சி

ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம், தனது பெருநிறுவன சமூக பொறுப்பின் ஒரு பகுதியான ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கான தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் சஞ்சய் சேத்தி
பகிர்:

இந்தியாவின் முன்னணி சரக்கு கையாளும் துறைமுகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகம், தனது பெருநிறுவன சமூக பொறுப்பின் ஒரு பகுதியான ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கான தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தை  துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி, ராய்காட் மாவட்டத்தில் உள்ள 1000 பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதற்காக ரூ. 50 லட்சம் ஒதுக்க ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம் அனுமதி அளித்துள்ளது. 

அழகு படுத்துதல் பயிற்சி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் உதவியாளர்கள், சானிட்டரி நாப்கின் தயாரித்தல், காய் மற்றும் மீன்களை உலர்த்துதல், வார்லி ஓவியம், ஊதுபத்தி தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்படும். 

ராய்காட் மாவட்டம் முழுவதும் 400 பயனாளிகளுக்கு 16 வெவ்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்துடன் தொடர்புடைய தன்னார்வத் தொண்டு  அமைப்பான ஜன் ஷிக்சான் சன்ஸ்தான், சுமார் 15 ஆண்டுகளாக திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார உருவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி பிரிவுகளில் 28 ஆயிரத்துக்கும் மேற்றப்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →