இந்தியா

மாநிலங்களிடம் 2.89 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.89 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 56,81,14,630 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 54,22,75,723 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,89,47,890 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 54.58 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT