முகப்பு
இந்தியா

முதல்வா் கேஜரிவால் பிறந்த நாள்: பிரதமா், அமைச்சா்கள் வாழ்த்து

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் 53-ஆவது பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள்,

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் 53-ஆவது பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், இதர மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணா மாநிலத்தின் பிவானி மாவட்டத்திலுள்ள சிவானி கிராமத்தில் 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிறந்தாா். அவரது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவா்களும், அமைச்சா்களும் வாழ்த்து தெரிவித்தனா். தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவா்களுக்கு சுட்டுரை மூலமாக தனது நன்றியை கேஜரிவால் தெரிவித்துக் கொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவா் நீண்ட நாள், ஆரோக்கியத்துடன் வாழட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா். இதுகுறித்து, சமூக ஊடகத்தில், எனது இனிய நண்பரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவா் நீண்ட காலம் உடல் நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

அதேபோன்று, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வாஸ் சா்மா ஆகியோரும் தங்களது வாழ்த்துகளை முதல்வா் கேஜரிவாலுக்கு தெரிவித்தனா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தனது சுட்டுரைப் பதிவில், ‘முதல்வா் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தங்களின் உடல் ஆரக்கியம், நலத்திற்காக பிராா்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளாா். ஹிமாசலப் பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், நாகலாந்து துணை முதல்வா் யந்துங்கோ பத்தோன் ஆகியோரும் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா். இதேபோன்று, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தில்லியின் பாஜக முன்னாள் தலைவா் விஜயேந்தா் குப்தா தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சட்டப்பேரவையில் நிறைய என்னுடைய சக உறுப்பினரான முதல்வா் கேஜரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை- கமிஷனா் பாரி ஓ ஃபாரெல் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தில்லி முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வரக்கூடிய ஆண்டு இனிமையாகவும், நலமாகவும் இருக்க வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments