அதிகரிக்கும் கரோனா - கேரளத்திற்கு ரூ.267.35 கோடி வழங்க மத்திய அரசு முடிவு 
இந்தியா

அதிகரிக்கும் கரோனா - கேரளத்திற்கு ரூ.267.35 கோடி வழங்க மத்திய அரசு முடிவு

கேரளத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கரோனாவால் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில்  தொற்றின் நிலவரத்தை அறிய நேற்று  (ஆக-16) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளம் வந்திருந்தார

DIN

கேரளத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கரோனாவால் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில்  தொற்றின் நிலவரத்தை அறிய நேற்று  (ஆக-16) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளம் வந்திருந்தார். 

கரோனாவின் தீவிரத்தை அறிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் , மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்திந்தார். 

சந்திப்பிற்கு பின் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த கேரள அரசிற்கு உத்தரவு பிறப்பித்தோடு கரோனா இரண்டாம் அவசரகால நிதியாக 267.35 கோடியை அம்மாநில அரசிற்கு வழங்கப்படும் எனவும் அதற்கு முன் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மருந்துகள் தட்டுப்பாடுகளை நீக்க ரூ.1 கோடி வழங்க இருப்பதாகவும்  அறிவித்திருக்கிறார்.

மேலும்  கேரளத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 40,000 பேருக்கு மேல் மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 

தற்போது 1.79 லட்சம் பேர் கரோனா பாதிப்பில் இருக்கிறார்கள். கடந்த வருடத்திலிருந்து இதுவரை 18,601 பேர் கரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT