முகப்பு
இந்தியா

முதியோர் இல்லத்தில் மதிய உணவருந்திய ராகுல் காந்தி

மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று முதியோர் இல்லத்தில் மதிய உணவை அருந்தினார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2021 at 3:49 PM
முதியோர் இல்லத்தில் மதிய உணவருந்திய ராகுல் காந்தி
பகிர்:

மூன்று நாள் பயணமாக கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று முதியோர் இல்லத்தில் மதிய உணவை அருந்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று வருகிறார். 

இந்நிலையில், இன்று காலை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். 

Advertisement

அதன்பிறகு, மலப்புரம் மாவட்டம் காந்தி பவன் முதியோர் இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார்.

முன்னதாக நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்த பின்னர் மானந்தவாடியில் சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.