இந்தியா

'காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் மீட்கப்படுவர்'

DIN

காபூல் விமான நிலையம் திறந்ததும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் செல்ல விமானங்களை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகள் விமான போக்குவரத்திற்கு காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் எஞ்சியுள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப் படையில் சி-17 ரக விமானம் மூலம் நேற்று இரவு 120 பேரும், இன்று காலை 129 அதிகாரிகளும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டிலுள்ள மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல முயன்றுவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT