இந்தியா

நாட்டில் புதிதாக மேலும் 36,401 பேருக்கு தொற்று: 530 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,401 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,401 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 530 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,23,22,258-ஆக உயா்ந்துள்ளது. 

39,157 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,15,25,080 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,64,129-ஆக உள்ளது. இது கடந்த 149 நாள்களுக்குப் பின் பதிவாகும் குறைந்த எண்ணிக்கையாகும். தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.52 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.14 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 530 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,33,049 -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 56,64,88,433 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் புதன்கிழமை மட்டும் 56,36,336 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,03,00,840 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 18,73,757 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT