முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலியானார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இன்று நெடுஞ்சாலை திட்டப்பணிக்காக தொழிலாளர்கள் சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் பயணித்த 12 தொழிலாளர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தாக கூறப்படுகிறது. 

பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனோர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →