தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் 
இந்தியா

மகாராஷ்டிரம் : குடும்பத்தைப் பிரிந்து  ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்கள் மீட்பு 

மகாராஷ்டிரத்தில் கடந்த 7 மாதங்களில் குடும்பங்களைப் பிரிந்து மத்திய ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அவரவர்  பெற்றோர்களுடன் ஒப்படைத்திருக்கிறார்கள்

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 7 மாதங்களில் குடும்பங்களைப் பிரிந்து மத்திய ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 477 சிறார்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு அவரவர்  பெற்றோர்களுடன் ஒப்படைத்திருக்கிறார்கள்

மீட்கப்பட்ட 477 பேரில் 310 பேர் சிறுவர்கள் என்றும் 167 பேர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

முக்கியமாக கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை  மும்பை , நாக்பூர் , பூசாவல், புணே மற்றும் சோலாபூர் ரயில் நிலையங்களில் அதிகமும் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

'பெரும்பாலும் வீட்டில் யாராவது அடித்தாலோ அல்லது குடும்ப பிரச்னைகளால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பி ரயில் நிலையங்களின் நடைமேடையிலோ அல்லது ரயிலிலோ தஞ்சம் அடைகிறவர்களை விசாரித்து பின் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்' என ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT