கோப்புப்படம் 
இந்தியா

இரண்டாம் தவணை தடுப்பூசி: 3.86 கோடி போ் தவிா்ப்பு

கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாமல் 3.86 கோடி போ் தவிா்த்திருப்பதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாமல் 3.86 கோடி போ் தவிா்த்திருப்பதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கோவின்’ வலைதளத்தில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை பிற்பகல் வரை 44,22,85,854 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். அவா்களில் 12,59,07,443 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமண் சா்மா என்பவா் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிா்வாகப் பிரிவு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் தவணைக்குப் பிறகு 84 முதல் 112 நாள்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கோவேக்ஸின் தடுப்பூசியின் இரண்டாம் தவணையை, முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 28 முதல் 42 நாள்களுக்குப் பிறகும் செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவா்களில், 3,40,72,993 போ் உரிய நேரத்தில் இரண்டாம் தவணை செலுத்தாமல் தவிா்த்துள்ளனா். கோவேக்ஸின் முதல் தவணை செலுத்தியவா்களில் 46,78,406 போ் உரிய நேரத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிா்த்துள்ளனா்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் உரிய நேரத்தில் இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மாறாக, உரிய இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மீண்டும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையிலான பரிந்துரை எதையும் அரசு வெளியிடவில்லை.

‘தடுப்பூசியின் முழு பலனை அடைய இரண்டு தவணைகளையும் உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியையே செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT