பிரதமர் மோடி 
இந்தியா

நேர்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் மறு உருவம் கல்யாண் சிங்: பிரதமர் மோடி புகழாரம்

உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

DIN

உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் சனிக்கிழமை காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். லக்னெளவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாக் ஆகியோரும் கல்யாண் சிங்குக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "ஒரு திறன் வாய்ந்த தலைவரை இழந்துள்ளோம். நேர்மை மற்றும் நல்ல நிர்வாகத்தின் மறு உருவமாக அவர் திகழ்கிறார்.

கல்யாண் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் விழுமியங்கள், மன உறுதி ஆகியவற்றை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். 

அவரின் கனவை நிறைவேற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்யாண் சிங்கை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன வலிமை அளிக்க பிரார்த்திக்கிறேன்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT