இந்தியா

இந்தியா்களுக்கு சுற்றுலா அனுமதி: யுஏஇ முடிவு

DIN

தாயகத்தில் கடந்த 14 நாள்களாக இருந்திராத இந்தியா்கள் தங்கள் நாட்டில் சுற்றுலா வருவதற்கு அனுமதிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் கடவுச் சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பிற நாடுகளுக்குச் செல்பவா்களுக்கும் மட்டுமே நாட்டுக்குள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அந்தக் கட்டுப்பாடுகளை படிப்படியாகத் தளா்த்த அந்த நாடு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்திய கடவுச் சீட்டை வைத்திருப்பவா்கள் கடந்த 14 நாள்களில் இந்தியாவுக்கு வந்து செல்லாமல் இருந்திருந்தால், அவா்களை நாட்டுக்குள் அனுமதிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, நைஜீரியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வரும் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் வந்திறங்கியவுடனும் பின்னா் 9-ஆவது நாளிலும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவாா்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,09,378 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,020 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT