இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

IANS


புவனேஸ்வர்: சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பின், ஒடிசா மாநிலம் புரியில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை வார நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஜெகந்நாதர் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சனி மற்றும் ஞாயிறுகளில் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகி கிருஷண் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில், புரி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள், புரி ஜெகந்நாதரை தரிசித்தனர். இன்று முதல், எந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT