இந்தியா

திரிபுரா: ஆக. 25 முதல் 6-12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

திரிபுராவில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

DIN

திரிபுராவில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா குறைந்து வருகிறது.

திரிபுராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதய நோய், நீரிழிவு.. உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்!

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் இன்று சுற்றுப்பயணம்!

நடந்தது என்ன? கௌரி கிஷன் பேட்டி!

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை! - சென்னை ஆட்சியர்

SCROLL FOR NEXT