முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக நோய்த் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து உயிரிழப்பது பதிவாகாமல் இருப்பது இது 15-வது முறை.

புதிதாக 39 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,485 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 114 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,11,995 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 25,079 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.74 சதவிகிதம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.