முகப்பு
இந்தியா

காஷ்மீர் : 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நேற்று (ஆக-23 திங்கள்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட

Updated On : 24 ஆகஸ்ட், 2021 at 11:42 AM
காஷ்மீர் : இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நேற்று (ஆக-23 திங்கள்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் அலூச்சி பாக் பகுதியில் தீவிர தேடுதலில் இருந்த பாதுகாப்பபி  படையினரிடம் சிக்கிக்கொண்ட தீவிரவாதிகள் முதலில் தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்கள்.

பின் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை இணைத்து நடத்திய தாக்குதலில் லஷ்கர்-ஏ-தொய்பா  அமைப்பைச் சேர்த்த முக்கிய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் டிஆர்எப் எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரென்ட் ' என்கிற அமைப்பிலும் தொடர்புடையவர்கள்.

Advertisement

தீவிரவாதிகள் அப்பாஸ் ஷேக் மற்றும் சாகிப் மன்சூர் இருவரும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியவர்கள் என்றும் பல குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் காவல்துறை தலைவர் விஜயகுமார்.

மேலும் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.