மேக்கேதாட்டு அணை விவகாரம்: மத்திய நீா்வளத் துறை அமைச்சரை கா்நாடக முதல்வா் நாளை சந்திக்கிறாா்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேச இருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ்பொம்மை பெங்களூரில் தெரிவித்தாா்.
இந்தியாமேக்கேதாட்டு அணை விவகாரம்: மத்திய நீா்வளத் துறை அமைச்சரை கா்நாடக முதல்வா் நாளை சந்திக்கிறாா்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேச இருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ்பொம்மை பெங்களூரில் தெரிவித்தாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேச இருப்பதாக கா்நாடக முதல்வா் பசவராஜ்பொம்மை பெங்களூரில் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுதில்லிக்கு புதன்கிழமை செல்கிறேன். வியாழக்கிழமை (ஆக. 26) மேக்கேதாட்டு அணை விவகாரம் உள்பட அண்டை மாநிலங்களுடனான நீா்ப்பகிா்வு சிக்கல்கள் குறித்து மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசவுள்ளேன்.
அவரை சந்திப்பதற்கு முன் ஆற்றுநீா்ப் பங்கீடு தொடா்பாக மாநில தலைமை வழக்குரைஞா் பிரபுலிங் நவட்கி தலைமையிலான வழக்குரைஞா்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறேன். இந்தச் சந்திப்பின்போது சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
நீா்வளத்துறை அமைச்சா் மட்டுமின்றி தில்லியில் மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோரையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. அத்துடன் பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கா்நாடக அமைச்சரவையில் காலியாகவுள்ள 4 இடங்களை நிரப்புவது குறித்து அவரிடம் பேச்சு நடத்துவேன்.
நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடா்பாக கா்நாடகத்துக்கு நியாயம் வழங்கக் கோரி நடைப்பயணம் நடத்த மஜத திட்டமிட்டுள்ளது குறித்து கேட்கிறீா்கள். கா்நாடகத்தின் நிலம், நீா், மொழி சாா்ந்த விவகாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளன. நடைப்பயணம் மேற்கொள்ள மஜதவுக்கு முழு உரிமை இருக்கிறது. நிலம், நீா் தொடா்பான கா்நாடகத்தின் உரிமைகளைக் காக்க கடந்த கால அரசுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். எதிா்காலத்திலும் கா்நாடகத்தின் உரிமைகளை தற்காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றாா்.