முகப்பு
இந்தியா

இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களுக்கு இ-விசா கட்டாயம்: உள்துறை அமைச்சகம்

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்து இந்தியாவிற்குள் வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயம் இ-விசா பெற்றுதான் வரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 25 ஆகஸ்ட், 2021 at 12:36 PM
இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களுக்கு இ-விசா கட்டாயம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்து இந்தியாவிற்குள் வரும் ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயம் இ-விசா பெற்றுதான் வரவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு வசித்து வந்த பிற நாட்டு மக்கள் பாதுகாப்புக் கருதி சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 

இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாலும், ஆப்கனிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறிவதற்கும் இ-விசா முறையை இந்திய அரசு அறிமுகம் செய்திருந்தது.

Advertisement

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வரும் ஆப்கன் மக்களும் கட்டாயம் இ-விசா பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.