இந்தியா

சிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்எல்ஏ -விற்கு 25 ஆண்டுகள் சிறை

DIN

மேகாலயாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 14 ஆண்டு விசாரணைக்குப் பின், அம்மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.

புகரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தநிலையில் தற்போது அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எப்.எஸ்.சங்மா  ஜூலியஸ் டார்பாங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனையை  விதித்து தீர்ப்பளித்தார்.

முன்னதாக பலாத்கார வழக்கு நடந்த போதே சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT