இந்தியா

குஜராத்தில் செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

DIN


குஜராத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.  

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குஜராத்தில் தற்போது 160 பேர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,079 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கெனவே 9 முதல் 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT