முகப்பு
இந்தியா

மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:12 AM
மண்சரிவால் உருண்டு விழுந்த பாறை : எல்லை பாதுகாப்புப் படை வீரர் பலி
பகிர்:

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மொஹல்  பகுதியில் நேற்று (ஆக-25) அருகே இருந்த மலையிலிருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரரான நிசார் உசைன் விடுமுறையை கழிக்க சொந்த ஊர் திரும்பியதாகவும் அங்கு தோக் பகுதியில் அவரும் அவருடைய சகோதரரும் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மலையில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியதில் நிசார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய சகோதரர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.