இந்தியா

புதிய ஐடி விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ்ஆப் மனு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

DIN

புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட தகவலை முதலில் பகிர்ந்தது யார் என்பதை கண்டறிவது, குறிப்பிட்ட உரையாடல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்வது போன்றவை புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இது தனியுரிமையில் தலையீடுவது போல் உள்ளது, அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, புதிய விதிகளுக்கு எதிராக பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் முக்கிய வழக்கறிஞர் இல்லை எனக்கூறி வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தார். 

பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் சார்பு வழக்கறிஞர்கள் ஹரிஸ் சால்வே, முகுல் ரோஹத்கி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT