நாட்டில் புதிதாக 44,658 பேருக்குத் தொற்று; 496 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 3,26,03,188 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 32,988 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,21,428 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று கரோனாவுக்கு 496 பேர் பலியான நிலையில் இதுவரை 4,36,861 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 3,44,899 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 79,48,439 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 61,22,08,542 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு