கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கேரளம் மற்றும் மகாராஷ்டிர தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
14 மாவட்ங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவரை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடடிவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும்.
அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் பண்டிகை நாள்களில் கூட்டத்தை தவிர்க்க கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளத்தை பொறுத்தவரை தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு 30ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,70,703 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 32,801 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மலப்புரத்தில் 4,032, திரிச்சூரில் 3,953, எர்ணாகுளத்தில் 3,627 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று 179 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,313ஆக உயர்ந்துள்ளது.