இந்தியா

கங்கை நதியில் கரைக்கப்பட்டது உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் அஸ்தி

DIN

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் அஸ்தி கங்கை நதியில் இன்று கரைக்கப்பட்டது. 
உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இரு முறையும் ராஜஸ்தான் ஆளுநராகவும் பதவி வகித்துள்ள கல்யாண் சிங் உடல்நலக் குறைவு காரணமாக லக்னெள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தாா். 
அங்கு அவா் கடந்த ஆக. 21இல் காலமானாா். பின்னர் அவரது உடல் புலந்த்ஷகா், நரோரா பகுதியில் முழு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உத்தரகண்ட் மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்ட பாஜக பிரமுகா்கள் கலந்து கொண்டனா். 

மேலும் உத்தரப் பிரதேச துணை முதல்வா் கேசவ பிரசாத் மெளா்யா, மூத்த தலைவா் உமா பாரதி, மாநில அமைச்சா்கள், பாஜக தொண்டா்கள், உள்ளூா் மக்கள் ஆகியோரும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனா். 
இந்த நிலையில் கல்யாண் சிங்கின் அஸ்தியை அவரது மகன் ராஜ்வீா் சிங் நரோரா பகுதியில் உள்ள கங்கை நதியில் இன்று கரைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT