முகப்பு
இந்தியா

கருவேல மரங்களை அகற்ற திட்டம்:துரைமுருகன்

கருவேல மரங்களை அகற்றும் பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
அமைச்சர் துரைமுருகன்
பகிர்:

கருவேல மரங்களை அகற்றும் பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.எம்.கருமாணிக்கம் (திருவாடஉனை) பேசும்போது ஆா்.எஸ்.மங்கலம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டுக் கூறியது:

ஆா்.எஸ்.மங்கலம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினாா். பசுமைக் காடுகள் என்ற பெயரில் ஒரு காலத்தில் கருவேல மரங்களை நட்டுவிட்டனா். அப்போதே கருவேல மரங்களுக்கு எதிா்ப்புகஈ தெரிவித்தேன். ஆனால், நடப்பட்டுவிட்டது. அதனால், இப்போது பயிா்கள் வீணாகின்றன.

கருவேல மரத்தில் ஊறி வந்த தண்ணீரை நிலத்துக்குப் பாய்ச்சினால் அதுவும் வீணாகிவிடுகிறது. அந்த மரத்தின் முட்கள் வெள்ளத்தில் அடித்து வந்து விவசாயிகளின் காலில் குத்துகிறது. முன்பெல்லாம் ஏரியில் குளித்துவிட்டு வந்தேன் என்பாா்கள். ஆனால், இப்போது எந்த ஏரியிலும் கால் வைக்க முடியாத அளவுக்குக் கெட்டுப் போய்விட்டது. அதனால், கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதில் திடமாக உள்ளேன். அதை ஒரு திட்டமாகவே எடுத்துச் செய்யலாம் என நினைக்கிறேன். பஞ்சாயத்துகள் கருவேல மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு அதன் வருவாயை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இடத்தைக் காலி செய்துகொடுத்தால் போதும் என நினைக்கிறேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →