முகப்பு
இந்தியா

வெள்ளி வென்ற பவினாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் மகளிா் டேபிள் டென்னிஸ் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற பவினா பட்டேல், சீனா வீராங்கனையுடன் தோல்வியுற்று, இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். 

இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார், சுட்டுரை பக்க பதிவில் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், பவினாவின் அசாத்திய திறமையும், உறுதியும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக புகழ்ந்துள்ளார். 

இதேபோல் பவினா பட்டேலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பவினா, சரித்திரம் படைத்துள்ளதாக பாராட்டியுள்ள மோடி, இவரது வாழ்க்கை பயணம் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாகவும், மேலும் பல இளைஞர்களை விளையாட்டு நோக்கி ஈர்ப்பதற்கு உந்துதலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →