முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: திரிணமூலில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் தன்மோய் கோஷ் திங்கள்கிழமை இணைந்தார்.

Updated On : 30 ஆகஸ்ட், 2021 at 5:40 PM
திரிணமூலில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ.
பகிர்:

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் தன்மோய் கோஷ் திங்கள்கிழமை இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 213 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த  திரிணமூல் காங்கிரஸில் பாஜகவின் பல தலைவர்கள் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிஷ்னுபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற தன்மோய் கோஷ் பாஜகவிலிருந்து விலகி அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில் இன்று திரிணமூல் கட்சியில் இணைந்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியது, பாஜக பழிவாங்கும் அரசியல் செய்கிறது. மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.