முகப்பு
இந்தியா

அக்டோபர் - நவம்பருக்கிடையே 3ஆம் அலை தீவிரமடையலாம்: ஐஐடி கான்பூர் 

நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
அக்டோபர் - நவம்பருக்கிடையே 3ஆம் அலை தீவிரமடையலாம்: ஐஐடி கான்பூர் 
பகிர்:


புது தில்லி: தற்போதிருக்கும் கரோனா தொற்று செப்டம்பரில் மேலும் அதிதீவிரமாக உருமாற்றம் அடைந்தால், நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதன் தீவிரம் எதிர்பார்ப்பதைப் போல இரண்டாம் அலையைப் போல கடும் பாதிப்பை ஏற்படுத்தாது, பாதிப்பு அதைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கரோனா பேரிடர் காலத்தில் வந்த புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சி நடத்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஐடி-கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர் கொண்ட குழுவில் அங்கம் வகித்த மகிந்திரா அகர்வால் கூறுகையில், ஒரு வேளை, புதிதாக அதிதீவிர கரோனா உருமாற்றமடையாவிட்டால், நிலைமை மோசமடைய வாய்ப்பில்லாமல் போகலாம் என்கிறார்.

நாட்டில் கரோனா மூன்றாம் அலை உருவானாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகலாம், இரண்டாம் அலை போல அதிகபட்சமாக 4 லட்சம் பேர் வரை கரோனா உறுதி செய்யப்பட்டது போல நேரிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.