முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

Updated On : 30 ஆகஸ்ட், 2021 at 1:42 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஏகே 47 துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Advertisement

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.