முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

நின்றுபோன ரயில் பெட்டியை இறங்கித் தள்ளிய தொழிலாளர்கள்: ம.பி. அவலம்

காரோ லாரியோ பேருந்தோ வழியில் நின்றுவிட்டால் அதில் அமர்ந்திருப்பவர்களை இறங்கித் தள்ளச் சொல்லலாம். இதுபோன்ற சம்பவங்களை சாலைகளில் கூட இதை பார்த்திருப்போம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
கோப்புப்படம்
பகிர்:

காரோ லாரியோ பேருந்தோ வழியில் நின்றுவிட்டால் அதில் அமர்ந்திருப்பவர்களை இறங்கித் தள்ளச் சொல்லலாம். இதுபோன்ற சம்பவங்களை சாலைகளில் கூட இதை பார்த்திருப்போம்.

ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம் தக்கமர் பகுதியில் வழியில் நின்றுபோன ரயிலை 50 தொழிலாளர்கள் வெறும் கைகளால் தள்ளிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலின் எஞ்ஜின் போன்ற பெட்டியை 50க்கும் மேற்பட்டோர் தள்ளிச் செல்வது போன்ற விடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் தான் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நடுவழியில் நின்று போன ரயில் எஞ்ஜின் பெட்டியை, சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தள்ளிச் செல்கிறார்கள். அப்போது அதே தண்டவாளத்தில் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததும் விடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ போபால் ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இடர்சி - ஹர்தா ரயில் நிலையங்களுக்கு இடையே திமர்னி ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் எஞ்ஜின் பெட்டி நின்று விட, அதை இயக்கும் முயற்சியில் ஓட்டுநர் தோல்வி அடைந்தார். இதற்கிடையே பின்னால் அதே தண்டவாளத்தில் வந்த ரயில்கள் வரிசைகட்டி நிற்க, நிலைமை மோசமடைந்தது. அந்த எஞ்ஜின் பெட்டியிலிருந்து பொருள்களை எல்லாம் இறக்கிவிட்டு, மீண்டும் இயக்க முயற்சிக்கப்பட்டது. அப்போதும் அது இயங்கவில்லை என்பதால், அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் சிலரை அழைத்து வந்து ரயிலைத் தள்ள முயன்றனர். ஆனால் அது ஒரு அடி கூட நகரவில்லை. பிறகு மேலும் சில கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். சுமார் 50 பேரை அழைத்து வந்து அந்தப் பெட்டியை ஒரு மணி நேரம் தள்ளிவந்து, முதன்மை தண்டவாளத்தில் இருந்து வேறு தண்டவாளத்துக்கு மாற்றினர்.

இதனால், பின்னால் நின்றிருந்த பவன் விரைவு ரயில் 2 மணி நேரம் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. எஞ்ஜின் பெட்டி வேறு தண்டவாளத்துக்கு மாறிய பிறகே ரயில் போக்குவரத்து சீரடைந்தது.
 
முழு கட்டுரையைப் படிக்க →