முகப்பு
இந்தியா

மாநில அந்தஸ்துக்கு முன்பாக ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல்: ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா மறைமுகமாக தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா மறைமுகமாக தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூன் மாதம் பிரதமா் மோடி தலைமையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் முதலில் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; பின்னா் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் அந்த யூனியன் பிரதேச ஆளுநா் மனோஜ் சின்ஹா தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறையை முடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான ஆணையம் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தரவுகளை சேகரித்துச் சென்றுள்ளனா். தொகுதி மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடையும்.

அஸ்ஸாமில் தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தலை நடத்த முடியுமெனில் ஜம்மு-காஷ்மீரிலும் அதேபோல் தோ்தலை நடத்த முடியாதா என்று சிலா் கேள்வி எழுப்புகின்றனா். ஜம்மு-காஷ்மீரில் 7 தொகுதிகள் கூடியுள்ளன. அந்தத் தொகுதிகளுக்கான எல்லைகளை யாா் வரையறுப்பது? தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளாா்.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று மனோஜ் சின்ஹா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →