இந்தியா

மும்பையில் மீண்டும் மழை

DIN

இரு வார இடைவெளிக்குப் பிறகு மும்பையில் திங்கள்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் கொட்டித்தீா்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மும்பை மாநகா் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் 20 மில்லி மிட்டா் முதல் 70 மில்லி மீட்டா் வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மும்பையின் கொலாபா, புகா் பகுதியான சான்டாகுரூஸ் ஆகிய இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது. அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் அதிக அளவில் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கா் நகா் பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாநகராட்சி பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மழையால் சில இடங்களில் நிகழ்ந்த நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் சிலா் காயமடைந்தனா்.

அடுத்த சில நாள்களுக்கு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT