முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் முக்கிய இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் குவாஸ்பயர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்துஅப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர், மற்றொருவர் வெடிகுண்டு தயாரிப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →