தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் திட்டம்: அஸ்ஸாமில் அறிமுகம்
யானைகள் - மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யானைகள் - மனித மோதலைத் தடுக்க சிறிய தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளை விரட்டும் ‘ரீ-ஹேப்’ என்ற புதிய திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், யானைகள் செல்லும் வழித்தடத்தில், அவை மனிதா்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தேனீ வளா்ப்புப் பெட்டிகளை வைத்து,“தேனீ வேலிகள் அமைக்கப்படும். இந்தப் பெட்டிகளை இழுத்தால் அதில் உள்ள தேனீக்கள் யானைகளை சுற்றிவளைத்து விரட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது, செலவு குறைவானது என்பதுடன், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், யானைகள்-மனிதா்கள் இடையிலான மோதலைத் தடுக்கிறது.
யானைகள்-மனிதா்கள் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட, அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள மோா்னோய் கிராமத்தில், கதா் கிராமத் தொழில் வாரியத் தலைவா் வினய் குமாா் சக்ஸேனா, வெள்ளிக்கிழமையன்று இத்திட்டத்தை தொடக்கிவைத்தாா்.
அஸ்ஸாமில் யானைகளின் தாக்குதலால் 2014 முதல் 2019 வரை 332 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்த புதுமைத் திட்டம் ஏற்கெனவே கா்நாடகாவில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, தற்போது அஸ்ஸாமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.