இந்தியா

கரோனாவுக்கு ஒரே நாளில் 2769 பேர் சாவு: புதிதாக 8,895 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2769 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

DIN

புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2769 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 8,895

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,46,15,436.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 6,918
இதுவரை குணமடைந்தோர்: 3,40,60,774.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.35​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்:  2,796. உயிரிழந்தோர் விகிதம் 1.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,73,326.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை:  99,155. இது கடந்த 548 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் 1,27,61,83,065  கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 64,72,52,850 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 12,26,064 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT