காதல் திருமணம்: பெண் தலையை துண்டித்த சகோதரன்; தலையுடன் செல்ஃபி எடுத்த கொடூரம் 
இந்தியா

காதல் திருமணம்: பெண் தலையை துண்டித்த சகோதரன்; தலையுடன் செல்ஃபி எடுத்த கொடூரம்

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தனது சகோதரியின் தலையை, தாயின் உதவியோடு துண்டித்து இளைய சகோதரன் கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது.

DIN


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தனது சகோதரியின் தலையை, தாயின் உதவியோடு துண்டித்து இளைய சகோதரன் கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று, அப்பெண் திருமணமாகிச் சென்ற வீட்டிலேயே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. 

இந்த கொடூரங்களுக்கு எல்லாம் கொடூரமாக, துண்டித்த தலையை, தாயும், சகோதரனும், அண்டைவீட்டார்களுக்கு உயர்த்திக் காண்பித்தும், அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதும், காண்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தன் மகள், தங்களுக்குத் தெரியாமல், வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தாயும், சகோதரனும் இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.  தனது மகள் வீட்டுக்கு இருவரும் ஏற்கனவே இரண்டு முறைச் சென்று வந்ததால், அவர்களது வீட்டில் இவர்கள் மீது சந்தேகம் ஏற்படவில்லை. தனது மனைவியுடன் தாய் தனிமையில் பேச வசதியாக, காதல் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மனைவியின் அலறல் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் ஓடி வந்த அவரையும், மனைவியின் சகோதரர் வெட்ட முயன்றுள்ளார். ஆனால், அவர் தப்பியோடியுள்ளார்.

இந்த கொலை வழக்கில், தாய் ஷோபா (38), சகோதரன் சஞ்சய் (18) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களது குடும்பத்தை தலைகுனிய வைத்ததால், இந்தக் கொலையைச் செய்ததாக குற்றவாளிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT