இந்தியா

வெலிங்டனில் விபின் ராவத் உடலுக்கு முப்படைத் தளபதிகள், முதல்வர் நாளை அஞ்சலி

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் ராணுவ பயிற்சிக்கல்லூரியின் பொது மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

DIN

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் ராணுவ பயிற்சிக்கல்லூரியின் பொது மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இதில் முப்படைகளின் தளபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகின்றனர். 

வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சூலூர் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விங் கமாண்டர் வருண் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனை

விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணியளவில் ராணுவ பயிற்சிக் கல்லூரி பொதுமைதானத்தில் விபின் ராவத் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

இதில் முப்படைகளின் தளபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT