இந்தியா

சர்வதேச விமான சேவைக்கான தடை 2022 ஜனவரி வரை நீட்டிப்பு

DIN

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஒமைக்ரான் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு ஒத்திவைத்தது.

மேலும் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT