முகப்பு
இந்தியா

ஒமைக்ரான்: மகாராஷ்டிரத்தின் முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நபருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்யான்-டோம்பிவிலி மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியது:

"மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபரான 33 வயது பொறியாளருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 7 நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்."

இவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர். நாட்டின் 4-வது நபர். இவர் தென் ஆப்பிரிக்காவின் கேப்டௌனிலிருந்து துபை மற்றும் தில்லி வழியாக நவம்பர் 24-ம் தேதி மும்பை வந்தடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →