இந்தியா

13 பேரின் உடல்களும் தில்லி கொண்டு செல்லப்பட்டது

DIN


புது தில்லி: குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து தில்லி கொண்டு செல்லப்பட்டது.

வெலிங்டனிலிருந்து சாலை வழியாக ஆம்புலன்ஸ்களில் சூலூர் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அனைத்து உடல்களும் தில்லி கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், உடல்களை அடையாளம் காண்பது மற்றும் உறவினர்களிடம் ஒப்படைப்பது குறித்து இந்திய ராணுவம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சிலரது உடல்கள் உருகுலைந்திருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இறந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், உறவினர்கள் அடையாளம் காண அனைத்து விதமான உதவிகளும் மேற்கொள்ளப்படும்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும், அவர்களது நெருங்கிய உறவினர்கள் அடையாளம் காட்டிய பிறகே ஒப்படைக்கப்படும். அதாவது, நெருங்கிய உறவினர்கள், உடல்களை உறுதியாக அடையாளம் காட்டிய பிறகு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல்கள் அடையாளம் காணப்பட்டு, ஒப்படைக்கப்பட்ட பிறகே, உரிய ராணுவ மரியாதை அளிக்கப்படும்.

இதற்காக, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் நெருங்கிய உறவினர்களை புது தில்லி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உருகுலைந்த உடல்களை நெருங்கிய உறவினர்கள் அடையாளம் காண அனைத்து உதவிளும் செய்யப்படும், கூடுதலாக அறிவியல்பூர்வ ஆய்வும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT